மருத்துவ வரலாற்றில் சிறந்து விளங்கியோர் பற்றி எடுத்துக் கூறும் நுால். உயிர் காக்கும் பணியில் பாடுபட்டோர் சேவை மேன்மையாக தரப்பட்டுள்ளது.
மருத்துவர் வரலாறு துவங்கி, ஆதிபட்டர், நாவிதர் வரலாறு, மருத்துவர்களுக்கு மறுப்பு, மன்னர் காலத்து மருத்துவம், வரலாற்று உண்மைகள், நாட்டுப்புற மருத்துவம், சித்த மருத்துவம், மருத்துவ மாமேதைகள், பண்டுவர், மாரியம்மை என்ற தலைப்புகளில் பல இயல்களில் தகவல்களை தரும் நுால்.
பிணிகளை குணப்படுத்துவதில் பண்டை காலத்தில் கடைப்பிடித்த நடைமுறைகள் பற்றிய விபரங்கள் உள்ளன. கோவில்கள் பிணி நீக்கும் இடமாக இருந்த சிறப்பும் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மருத்துவ முறை பற்றிய தகவல்கள் உடைய நுால்.
– ஒளி