எளிய மனிதர்களின் வாழ்க்கை சூழல்களை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
சங்கத் தலைவரின் செயல்பாடுகளால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை, ‘புதுயுகம்’ கதை எதார்த்தத்துடன் சொல்கிறது. ஜாதி மறுப்பு திருமணத்தை ஏற்க மறுக்கும் சமூகம், பெண் எடுக்கும் முடிவை, ‘மாறவேண்டிய மனிதர்கள்’ புதுமை படைக்கிறது.
மத விரோதம் உப்புக்கு கூட உதவாது என, ‘பாங்கொலி’ எச்சரிக்கிறது. அக்கா கதை சோகத்தை வரவழைக்கிறது. இரு தலைமுறை வாழ்வியலில் ஏற்படும் வரைமுறை மீறல்களை, ‘வளர்ப்பு மகன்’ கதை பகிர்கிறது.
– டி.எஸ்.ராயன்