முகப்பு » கதைகள் » ஒரு தலைக் காதல்!

ஒரு தலைக் காதல்!

விலைரூ.175

ஆசிரியர் : சுஸ்ரீ

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இப்படியும் நடக்குமா? நடந்தால் நல்லது தான்! மூன்று பேரின் ஒருதலை காதலை சிரிப்புடன் சேர்த்து பின்னிப் பிணைக்கும் நுால்.

ஏழாம் வகுப்பில் தொட்ட நட்பு. உடன் படிக்கும் பெண்ணால் விரிசல். அவர்கள் வாழ்வில் குறுக்கிட்ட பெண்ணை திரும்ப எங்கே எப்படி சந்தித்தனர்? கதை ஹைதராபாத், அமெரிக்கா என்று இறக்கை கட்டுகிறது.

தன்னை நேசித்த பெண்ணை மணமுடித்தால் எத்தனை சுவையாக இருக்கும்! அவன் முதல் காதலைப் பற்றி அவளுக்கு தெரியும். தெரிந்து கேள்வி கேட்கும் பொழுது எப்படி இருக்கும். நேரம் போவதே தெரியாமல் பறக்கும் கதையாக உள்ள நுால். நகைச்சுவை மிகவும் துாக்கலாக உள்ளது. திரும்பப் படிக்கத் துாண்டும் நகைச்சுவை நடையழகு. ரசிக்க தகுந்த நாவல் நுால்.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us