பள்ளியை மையமாகக் கொண்டு பதின் பருவத்தை அழகிய சித்திரமாகத் தீட்டியிருக்கும் தன் வரலாற்று நாவல்.
பள்ளி ஆசிரியருக்கு பிறந்து, மாணவியாக வளர்ந்து, ஆசிரியராக சிறந்து, பணி நிறைவு பெற்றது வரை பருவத்தின் துள்ளலையும், துடிப்புகளையும் பத்து அத்தியாயங்களில் பதிவு செய்துள்ளது. நினைவு அடுக்குகளில் பதிந்து கிடந்த மாணவப்பருவ சுவையான நிகழ்வுகள் மறைந்திருக்கும் குழந்தைத்தனத்தை மீட்டெடுக்கச் செய்கிறது.
குழந்தை – குமரப் பருவம் இடையிலான பசுமையான நினைவுகளை படம்பிடித்துக் காட்டுகிறது. நிஜ வாழ்வில் பார்த்ததை, ரசித்ததை, கேட்டதை, உணர்ந்ததை அழகாகத் தொகுத்து நினைவோடையாக பதிவு செய்திருப்பது சிறப்பு. ரம்மியமான நினைவுகளையும், பள்ளியின் நிழலையும், அதன் குளுமையும் ஒரு சேர மனதில் ரசிக்க வைக்கும் நுால்.
– ஊஞ்சல் பிரபு