திருமந்திரத்தில் காணப்படும் வியப்பூட்டும் வாழ்வியல் ஒப்புமைகளை, ஆங்கிலத்தில் எடுத்துரைக்கும் நுால்.
நெல்லிக்காயை தின்னும் நாவுக்குப் பெரிதாக அதன் சுவை தெரியாது. பின், தண்ணீரைக் குடித்தால் சுவையை அறிந்து கொள்ளலாம். அது போல் திருமந்திரத்தை படிக்கும்போது சிரமமாக இருந்தாலும், தத்துவங்கள் வாழ்வில் இன்பத்தை வழங்கும் என அறிவித்துள்ளது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு திருமந்திரப் பாடலை முன்வைத்து வாழ்வியல் தத்துவங்களை மிக எளிமையாக எடுத்துரைக்கிறது. சிவனை அறிய வேண்டும் என்றால் ஏட்டில் தேடுவதை விடவும்; நமக்குள்ளேயே தேட வேண்டும் என உணர்த்துகிறது. திருமந்திரச் சாரமாக உள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்