எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள், சராசரி பாமரருக்கும் அருள் புரிவதற்காகப் பற்பல வடிவங்கள் எடுக்கிறது. திருக்கோவில்களில் எழுந்தருளியுள்ள தெய்வத்திருமேனிகள் எழில் ஓவியங்களாகப் படைக்கப்பட்டுள்ளன.
இறைவடிவை பார்த்து தியானிக்கும் வகையில் அமைந்துள்ளன. அடி முடி காண இயலாத அருட்பெருஞ்சோதி தற்போது சிற்பச் சுடராகி, ஓவிய மலராகி, துாரிகைக்குள் துளிராகி, கண்ணுக்குள் கருவாக வந்துள்ளது. ஓவியங்கள், அவற்றுக்கான விளக்கங்களோடும், தெய்வங்கள் தோன்றிய வரலாறுகளோடும் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஓவியங்களை தனிப்படங்களாக பெற்றுக் கொள்ளலாம்.
– இளங்கோவன்