எழுத்துலகில் மறையாது ஒளி வீசும் தீபம் நா.பார்த்தசாரதி மகள், தந்தையின் சிந்தனை முத்துகளை கோர்த்து உள்ள நுால். பொன்விலங்கு, குறிஞ்சிமலர், பாண்டிமாதேவி, நீலநயனங்கள், நித்திலவல்லி, பிறந்தமண், மணிபல்லவம், ராணி மங்கம்மாள், நெற்றிக்கண், துளசி மாடம், சத்திய வெள்ளம் நாவல்களில் சிந்தனை வைரங்களை பட்டை தீட்டி மிளிர வைக்கப்பட்டுள்ளது.
அன்பு எல்லா நோய்க்கும் மருந்துதான்; அதுவே பொய்யாகி விட்டால் தீராத நோயாகி விடும். பொய்யான ஒன்று எவ்வாறு அன்பாக முடியும். ஞானத்தை தனக்குள் அடக்கிக்கொள்ளாமல்,அனைவருக்கும் பயன்படும் கற்பூரம் போல் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். இதுபோல் எடுத்தாண்டு நம்பிக்கைத் தீபம் ஏற்றும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்