வாழ்த்துக் கவிதைகளின் தொகுப்பு நுால். அனைத்தும் கற்கண்டு குவியலாய் களிப்பூட்டுகின்றன.
மொழி ஆளுமையும், விசாலமான பார்வையும் ஒவ்வொரு கவிதையிலும் மேலோங்கி நிற்கின்றன. ‘வதுவை வாழ்த்து மலர்’ என்ற தலைப்பில் புதுமணப் பூக்களை வாழ்த்துவது பொலிவாக உள்ளது. ‘நெஞ்சும் நெஞ்சும் கலந்து நெகிழ்ந்து காதல் கவிபாட, விஞ்சும் அன்பில் மணமக்கள்’ என்கிறது ஒரு நீண்ட கவிதை.
படித்த பள்ளி அனுபவம், வளரும் அறிவை கொடுத்த ஆசான், கொள்கை விதையை விதைத்த நுால்கள் என பல தலைப்புகளை கவிதையாக்கி மகிழ்வைத் தருகிறது. தீந்தமிழின் தேனாற்றில் நீந்திக்களிக்க விரும்புவோருக்கு தெவிட்டாத விருந்தளிக்கும் கவிதை நுால்.
– டாக்டர் கார்முகிலோன்