விடுதலைப் போரில் சேதுபதி மன்னரின் பங்களிப்பை கூறும் நுால்.
ஆங்கிலேயரை எதிர்த்து ராமநாதபுரம் அரசர் முத்துராமலிங்க விஜயரகு நாத சேதுபதி, 23 ஆண்டுகள் சிறையில் வாடி உயிரை தியாகம் செய்தது பற்றி குறிப்பிடுகிறது. விடுதலைக்காகப் போராடி சிறையில் மாண்டு போன சேதுபதியை, தென்னாப்ரிக்க தலைவர் மண்டேலாவுடன் ஒப்பீடு செய்துள்ளது. ராமேசுவரம் கோவிலுக்கு செல்வங்கள் வாரி வழங்கியும், அர்த்தசாம பூஜையில் தீவட்டி ஏந்தி வந்து தொண்டு செய்த தகவல்களும் உள்ளன.
ஆங்கிலேய படையெடுப்பு, கோட்டை கைப்பற்றுதல், மன்னர் சிறை வைப்பு மற்றும் கொடுமை நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது. மன்னர் சேதுபதியின் வீர வரலாற்றை தக்க ஆவணங்களுடன் ஆய்வு நோக்கில் காட்டும் சரித்திர நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்