அரசியல் நிகழ்வுகளை நையாண்டியுடன் வெளிப்படுத்தி சிந்திக்க துாண்டும் தொகுப்பு நுால். தமிழக, தேசிய அரசியல் சம்பவங்களை, ஆட்சியாளர் செயல்பாடுகளை மையமாக வைத்து கருத்துகளை கூறுகிறது.
கருணாநிதியிடம் ஸ்டாலின் கற்றுக்கொண்டது, பிரதமர் மோடி – மேற்கு வங்க முதல்வர் மம்தா மோதல் அரசியலை கூறுகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷா கனவு திட்டங்களை, சக அமைச்சர்களுடனான உரையாடலாக பகிர்கிறது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் அரசுகளின் போக்கை கூறுகிறது.
முறைகேடு வழக்கில் அதிகாரிகளின் செயல்பாடுகளை காட்டுகிறது. தமிழக அரசியல் நடப்புகளை நகைச்சுவை பொங்க சொல்கிறது. படைப்புகள் உரையாடல், பேட்டியாக உள்ளதால் சுவாரசியம் தருகிறது. நகைச்சுவையுடன் சிந்திக்க வேண்டிய கருத்துகள் உடைய நுால்.
– டி.எஸ்.ராயன்