திறமையுடன் தொழில் செய்து வளமாக வாழ துடிப்போருக்கு உதவும் நுால். அனுபவங்களின் பகிர்வாக உள்ளது.
ஒரு தொழிலை துவங்கி, அதை கடல் கடந்தும் விரிவாக்கும் நுட்பத்தை விவரிக்கிறது. பின்னணி இன்று துவங்கினால் வரும் இடையூறு, சவால்களை சமாளிக்க அபிப்ராயம் சொல்கிறது. அனுபவங்களை பாடமாக எடுத்து முன்னேற வலியுறுத்துகிறது.
அரசின் சட்டதிட்டங்களை கடைப்பிடிப்பது, வரவு – செலவு கையாளுதல், ஊழியர்களின் திறனை பயன்படுத்துவது, தரமான பொருட்களுக்கு உத்தரவாதம் கொடுப்பதுடன் மொழி அறிவும் தொழிலுக்கு தேவை என வலியுறுத்துகிறது. தாழ்வு மனப்பான்மையை விரட்டி, முயற்சி என்ற படியில் ஏறும் வழியை உரைக்கிறது. இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்