நம்பிக்கை, தெளிவு, துணிச்சல் தான், எப்போதும் காப்பாற்றி வழி நடத்தும் என போதிக்கும் நுால். துன்பம், தோல்வியிலும் நம்பிக்கையுடன் இருக்க அறிவுரைக்கிறது.
நம்பிக்கை கருத்துக்களை மனதில் பதிக்கும் முன்னேற்ற ஏணிப்படியாக உள்ளது. வரலாற்றில் இடம் பெற்றுள்ள அலெக்சாண்டர், நெப்போலியன், காந்திஜி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் பொன்மொழியை தருகிறது.
விவேகானந்தர், அரவிந்தர், வாரியார் ஆன்மிக சிந்தனைகளை எடுத்துரைக்கிறது. தத்துவ ஞானியர் உதிர்த்த முத்துகள், அவற்றில் அமிழ்து கிடக்கும் கருத்துகளைச் சுட்டிக்காட்டுகிறது. அமைதியை விட மேலான மகிழ்ச்சி எதுவும் இல்லை என்றுரைக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்