சித்தர்கள் அருளிய- ஓலைச் சுவடிகளில் இருந்து பதிப்பித்துள்ள நுால். தாயின் வயிற்றில் கரு வளரும் விதம் விளக்கப்பட்டு உள்ளது.
நாடிகள் குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது. வயிற்றில் கரு வளரும்போது, 10ம் மாதம் வரை தாய்க்கு வலி வந்தால் கொடுக்க வேண்டிய மருந்துகளின் விபரம் உள்ளது. குழந்தைக்கு வரக் கூடிய, 20 வகை வியாதிகளைக் கூறி, அவற்றின் அறிகுறிகள், மருத்துவ முறையை விளக்குகிறது.
காய்ச்சல் வகைகளை பிரித்து, அவற்றுக்கு உரிய மருந்துகள் குறித்து விளக்குகிறது. வயிற்றுப் பொருமல், மஞ்சள் காமாலை, காது பாதிப்பு, கக்குவான் இருமல், மாலைக்கண் நோய்களுக்கு இயற்கை முறையிலான மருத்துவம் கூறப்பட்டு உள்ளது.
ஆயுர்வேத மருத்துவம் பற்றிய அறிவைத் தரும் நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து