குறளையும், சமயக் கொள்கைகளையும் ஒப்பு நோக்கி எழுதப்பட்ட ஆய்வு நுால். வியப்பூட்டும் செய்திகளால் நிரம்பி உள்ளது.
சமணமும், புத்த மதமும், வள்ளுவரின்கருத்துக்களையே போதிப்பதாக குறிப்பிடுகிறது. புலால் உண்ணாமை, பிறன் மனைவி விரும்பாமை என்ற நீதிகள் நெடுங்காலத்துக்கு முன்பே சமூக வழக்கத்தில் இருப்பதை உறுதி செய்கிறது.
சமணத்தை பின்பற்றுவோர், தேன் உண்பதில்லை என்ற செய்தி புதிது. பிளாட்டோவின் அரசியல் நிர்வாகக் கருத்து இன்றைய சூழலிலும் பொருந்தி வருவதை சுட்டிக் காட்டுகிறது. அளவுக்கு மீறிய உணவும், அதிகாரமும் என்ன செய்யும் என சுட்டிக் காட்டுகிறது. குறள் கருத்துடன் மதங்களை வரலாற்றுச் சான்றுகளுடன் உரைக்கும் நுால்.
– சீத்தலைச்சாத்தன்