பாரதியார் பாடல்களில் நுணுக்கங்களை விளக்கும் நுால். பாரத தேச பெருமைகளை வியந்துள்ளது.
ஆங்கிலேயர் மீதான அச்சத்தை ஒழித்து, விடுதலை வேட்கையை துாண்டியது பதிவு செய்யப்பட்டுள்ளது. நல்லறிவு பயன்படாமல் போனதை, ‘நல்லதோர் வீணை செய்தே- அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ’ என வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தை, செந்தமிழ் நாடு என போற்றி சிறப்பித்துப் பாடியதற்கு தகுந்த விளக்கம் தருகிறது. பாரதியை இயற்கை ரசிகனாக, கொடுமைக்கு எதிராக பொங்கியவராக, பக்திமானாக சுவாரசியங்களுடன் வெளிப்படுத்தும் நுால்.