கலித்தொகைப் பாடல்களை பெண்ணிய நோக்கில் கூராய்வு செய்து கருத்துகளை தெரிவித்துள்ள நுால்.
கலித்தொகை பாடல்களில் உள்ள வருணனையில் வெளியாகியுள்ள பெண் உணர்வுகள் தொடர்பான கருத்தோட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. முல்லைக்கலி, குறிஞ்சிக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என வகைப்படுத்தி, பாடல்களை மேற்கோள்களாக தந்து மகளிர் உணர்ச்சி எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
சங்க காலப் பெண்களின் ஆளுமைப் பண்புகளை கலித்தொகைப் பாடல்களைக் கொண்டு எடுத்துக் காட்டியிருக்கிறது. பாரதியின் பெண் விடுதலை பாடல்களும் ஒப்புநோக்கி தரப்பட்டுள்ளன. பெண்ணிய கருத்துகளில் மித, தீவிரவாத போக்கின் செயல்பாட்டை விவரிக்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு