திருக்குறள் பாக்களை மனப்பாடம் செய்ய ஏற்றவகையில் வரிசைப்படுத்தி தரும் நுால். எழுத்து, வார்த்தை, சந்தம் ஆகியவற்றை ஆராய்ந்து வழக்கமான சிந்தனையோட்டத்தில் இருந்து மாறுபட்டுள்ளது.
சிறுவர், சிறுமியர் திருக்குறள் பாக்களை வரிசைப்படி மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்றனர். இதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு மனப்பாடம் செய்ய புதிய வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. பல உத்திகள் புகுத்தப்பட்டுள்ளன.
ஒரு குறள் முடியும் போது வரும் சொல்லை கணக்கிட்டு, அதே சொல்லில் துவங்குவது போல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. எழுத்து, சந்த தொடர்ச்சி அடிப்படையிலும் தரப்பட்டுள்ளது. மொத்த குறளும் இது போல் அமைக்கப்பட்டுள்ள நுால்.
– ராம்