சோழருக்கு காவிரிபூம்பட்டினம் தலைநகரானது, இமயத்தில் புலிக்கொடி பறக்க விட்டது போன்ற செய்திகளை கற்பனை கலந்து உரைக்கப்பட்டுள்ள நுால்.
இலங்கை – சோழ நாடு இடையே உறவு, காவிரி வெள்ள பாதிப்பு நடவடிக்கை, கல்லணை உருவான விதம் போன்ற வரலாற்று நிகழ்வுகள் விவரிக்கப்பட்டு உள்ளன. ஓட்டைப்படகை சரி செய்ய, இயற்கை கோந்து தயாரித்த விதம், இலங்கையுடனான கடற்போரில் நீரோட்டத்தை அறிந்தது பற்றிய விபரங்கள் உள்ளன.
காவிரி வெள்ளப் பாதிப்பின் போது விளைபொருட்களைச் சேமிக்க தீட்டிய திட்டங்கள், கல்லணை கட்டும் முன் ஆற்றை ஆராய்ந்த விதம் கற்பனையில் உருவாகிஉள்ளது. வரலாற்றை கதை வடிவில் கூறும் நுால்.
– இளங்கோவன்