வரகனேரி வெங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்ற, வ.வே.சு., வாழ்க்கையை கூறும் நுால். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதை பகிர்கிறது.
இளமைப் பருவத்தில் மல்யுத்தம், நீச்சல் பயிற்சி பெற்றிருந்ததுடன், ஆறு மொழிகளில் புலமை பெற்று, வக்கீலாக பணியாற்றியதை குறிப்பிடுகிறது. டாக்டருடன் நட்பாகி, அரசியல் கற்றதை கூறுகிறது.
சுதந்திரத்துக்காக போராட்டத்தில் இங்கிலாந்து நாட்டில் இருந்து பங்கேற்றதை விவரிக்கிறது. சிப்பாய்கலகத்தின் தாக்கத்தை பேசுகிறது. சாவர்க்கருடன் தொடர்பு பற்றி சொல்கிறது. அவர் உருவாக்கிய குருகுலத்தில், சமபந்தி போஜனத்திற்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டை உரைக்கிறது. அரசியலை விட்டு விலகி இலக்கியத்தில் ஈடுபட முயன்றதையும் தெளிவாக விவரிக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்