பழமொழிகளில் உட்பொருளை ஆராய்ந்து தெரிவிக்கும் நுால். பாரம்பரியமாக தமிழர் கடைப்பிடித்த அறிவியல் கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்கிறது.
சமூகத்தில் புழங்கி வரும் பழமொழிகளை ஆராய்ந்து அவற்றில் பொதிந்துள்ள உண்மை பொருளை தொகுத்து தருகிறது. வானியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என, 21 தலைப்புகளில் வகைபிரித்து, நுட்பமாக ஆராய்ந்து விளக்கம் தருகிறது.
முன்னோரிடம் இருந்து வாய்மொழி மரபாக வந்த அறிவியல் பண்பு மற்றும் தொழில் நுட்ப செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது. ஒரே பழமொழி இரண்டு பொருள் தரும் விந்தையையும் குறிப்பிடுகிறது. சூழல் அறிவின் உன்னதத்தை காட்டுகிறது. பழமொழியின் உண்மை பொருளை விளக்கும் நுால்.
– மதி