மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருக்குறளுக்கு எழுதிய உரை நுால்.
திருக்குறள் பாக்களில் உள்ள பொருள் புரிவதற்கு ஏற்ற வகையில் விளக்க உரையுடன் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இந்த நுாலும் அது போல் அமைந்தது. ஒவ்வொரு குறட்பாவுக்கும் தனித்தனியே விளக்க உரை எழுதப்பட்டுள்ளது. படித்து புரிந்து வாழ்வில் கடைப்பிடிக்க ஏற்றவகையில் எளிய நடையில் அமைந்துள்ளது.
புத்தகத்தில் சிறப்பம்சமாக, உரை துவங்கும் முன் திருக்குள் அதிகாரங்கள் அனைத்தும் அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. அதிகார அருஞ்சொல் பொருளும் அது போல் தரப்பட்டுள்ளது. காலத்துக்கு ஏற்ப புரிந்து கொள்ள உகந்த நடையில் எழுதப்பட்டுள்ளது. திருக்குறள் அறங்களை பொருள் புரிந்து படிக்க ஏற்றவகையில் அமைந்துள்ள உரை நுால்.
– மதி