பசியின் கதை, மரணத் தின் பாடல்கள், பேரன்பின் வேட்டை நிலம், நீர்மையின் பிரதிகள் உள்ளிட்ட தலைப் புகளின் கீழ் பல கவிதை கள் இடம் பெற்றுள்ளன. இவை, அவலங்களையும், அவஸ்தைகளையும் சொல்லும் தருணங்களை உணர்த்துகின்றன. அதே சமயம் நம் இருப்பின் மன எழுச்சியையும், அமைதியையும் குறியீட்டுத் தன்மையாக்கும் நிகழ்வும் இதில் நடந்திருக்கிறது.