பேராசான் அருகில் இருந்து வழிகாட்டுவதைப் போல், வாழ்க்கைத் தத்துவத்தை மனதில் பதிய வைக்கும் வண்ணம், பாங்குற சொல்லும் அருமையான நுால். அமைதியான, ஆனந்தமான வாழ்க்கைக்கு, அறிவின் துணை கொண்டு வழிகாட்டி விளக்கும் கருத்து பெட்டகம்.
அளவின்றிச் செய்யும் எதுவும் அல்லல் தரும் என்ற உண்மையை சொல்கிறது. கடந்த கால வருத்தத்திலும், எதிர்கால பயத்திலும் நிம்மதி இன்றி வாழ்கிறோம். நிகழ்காலத்தில் வாழ்வோர் பற்றிய கேள்வி சிந்திக்க வைக்கிறது. சடங்குகளில் மூழ்கினால், பயம், குழப்பமே மிஞ்சும் என எச்சரிக்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ்வதே, பகுத்தறிவின் பயன் என்கிறது. அகத்தெளிவுக்கு வழிகாட்டும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்