எளிய நடையில் அமைந்த மேடை நாடகங்களின் தொகுப்பு நுால். பெண்ணின் திறமையை மதிக்க வேண்டும் என்ற மையக்கருவை உடையது ஒன்று. தலைமுறை இடைவெளியால் வரும் பிரச்னையை காட்டுகிறது மற்றொரு நாடகம்.
பாடும் திறமையுள்ள பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி நகர்கிறது, ‘என்ன தவம் செய்தனை?’ என்ற நாடகம். அந்த திறமையை மறைத்து குடும்பத்தில் ஒன்றி வாழ்கிறாள் பெண். நிருபர் தந்த செய்தியால் அவளுக்கு உள்ள திறமை வெளிப்படுகிறது.
அந்த திறமையை உலகுக்கு அறிமுகம் செய்ய முன்வருகிறார் முதியவர். குடும்ப பின்னணியில் உருவாகியுள்ளது. கணவன் – மனைவி இடையேயான போராட்டத்தில் வெற்றி யாருக்கு என்பது தான் முடிவு. சிறப்பான காட்சிகளுடன் சுவாரசியம் குன்றாத உரையாடல்களுடனான நாடக நுால்.
– ராம்