ஞானானந்தகிரி சுவாமிகள் மீது இயற்றியுள்ள கீர்த்தனைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 273 கீர்த்தனைகள் வேதாந்த சாரம், தத்துவங்களை கொண்டு மிளிர்கின்றன.
குருநாதர் அன்பு, கருணை, பரிவு, தபோவன வருணனை, தல மகிமை, அருளாலய மகிமை என பல அம்சங்களுடன் ராகத் தாளத்துடன் இசை கீர்த்தனைகள் விளங்குகின்றன. அவற்றில், ‘திருவடி தொழுதல் அல்லால் மறு செயல் ஏதும் செய்தறியேன்’ என குருநாதர் திருவடியே உய்வதற்கு வழி என்று அறுதியிடுகின்றன.
ஒவ்வொரு கீர்த்தனையும் பல்லவி, அனுபல்லவி, சரணத்துடன் சுட்டப்பட்டுள்ளன. உரிய ராகமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இசைமணம் கமழும் நுால்.
– புலவர் சு.மதியழகன்