சமூகத்தில் அன்றாட நிகழ்வுகள், பார்த்த காட்சிகளை, தத்துவார்த்தம், ஆன்மிக பார்வையுடன் படைத்துஉள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். காதல் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கும் என்கிறது.
உணர்வை உணரச் செய்யும், ‘வெயில் மறை நதி’கருத்து ரசிக்க வைக்கிறது. ஏக்கத்தின் வெளிப்பாட்டை, ‘மயிலிறகும் பெருமழைக்காற்றும்’ என்ற தலைப்பில் தனித்துவமாக கூறுகிறது. குதிரையின் உரையாடலை இயல்பாக உரைக்கிறது.
கிராமத்தின் அழகியலை கண்முன் நிறுத்துகிறது. நரிக்குறவர் இன மக்களின் அடையாளங்களை, ‘நதி மீன் வேட்டுவம்’ என வாழ்வுடன் பொருத்துகிறது. கோவில் திருவிழாவில் கேட்கும் பலதர உரையாடலை வெளிப்படுத்துகிறது. எதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்