திருக்குறள் பாக்களுக்கு தமிழில் எளிய உரையும், ஆங்கிலத்தில் பொருத்தமான விளக்கமும் தந்துள்ள நுால். தனித்தனியாக பிரித்து புரியும்படி விளக்கப்பட்டுள்ளது.
பாயிரத்தில் துவங்கி, இல்லறவியல், துறவறவியல்,ஊழியல் என முறைப்படி தருகிறது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஆங்கிலத்தில் ஏற்புடைய பதம் தரப்பட்டுள்ளது. ஒரு குறளை குறிப்பிட்டு அதற்கு தமிழில் உரை தந்து, ஒவ்வொரு சொல்லுக்கும் தகுந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குறளின் உட்பொருளை உணர்த்தும் வகையில் ஆங்கிலத்தில் சுருக்கமான விளக்க உரை தரப்பட்டுள்ளது. அது, பொன்மொழி போல் மனதில் பதிகிறது. திருக்குறளுக்கு புதுமை விளக்க நுால்.
– மதி