விஜய நகர பேரரசின் இளவரசன் மீதான சமஸ்கிருத காப்பியத்துக்கு தமிழில் விளக்கவுரை தரும் நுால். இளவரசன் குமார கம்பண்ணர் மதுரையை மீட்டதை, அவன் பட்டத்து ராணியே எழுதியதாக முன்வைக்கிறது. ஒவ்வொரு சுலோகத்துக்கும் தெளிவான விளக்கம் தருகிறது.
மதுரை எல்லையில் சுல்தான் படையுடன் போர் நடந்ததாகக் கூறும் காப்பிய விளக்கங்களில் சிறப்பான காட்சியமைப்பை காண முடிகிறது. படையெடுப்புக்கான காரணங்கள் கூறப்பட்டு உள்ளன.
கம்பண்ணரின் தந்தை புக்கரின் பெருமைகள், விஜய நகர சிறப்பு, கம்பண்ணர் பிறப்பு, இளமை பருவம், போர் பயிற்சியை வர்ணிப்பதில் கவித்துவம் மிளிர்கிறது. கல்வெட்டு சான்றுகளும், மேற்கோள் பட்டியலும் தரப்பட்டுள்ள அரிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு