நாடகத் துறையில் பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து தரும் நுால். வங்கி பணியில் இருந்து கொண்டே பங்கேற்ற விபரம் பதிவாகியுள்ளது.
நாடகம் எழுதுவது, தயாரித்து நடிப்பது, குழு ஒருங்கிணைப்பது, சபா நிர்வாகம் செய்வது என பல துறைகளில் பெற்ற அனுபவங்கள் தரப்பட்டுள்ளன.
பள்ளியில் படித்த போதே நடிக்கும் விருப்பம் வந்ததையும், நாடகம் அரங்கேற்றியதையும் எடுத்து சொல்கிறது.
நாடகக் கதையை சினிமா ஆக்கிய முயற்சியை விளக்கி கூறுகிறது. தீண்டாமை, வாடகை தாய், ஊழல் அரசியல் போன்ற சிக்கல் கருத்துகளை மையப்படுத்திய மேடை நாடகங்களையும், அவற்றில் அசத்திய வசனங்களையும் பதிவு செய்துள்ளது.
மேடை நாடகக் கலையை வளர்த்து, வெற்றி கண்டவரின் வாழ்க்கை அனுபவ ஆவணமாக விளங்கும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்