மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப்பயணம் செய்த அனுபவத்தை சுவைபட பதிவு செய்துள்ள நுால். நகைச்சுவையும்,கிண்டலும் பின்னிப் பிணைந்து, வெகு சுவாரசிய நடையில் படைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணத்துக்கு தேவையான ஆவணங்கள் பட்டியல் தரப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள், ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கிறது. அந்த நாட்டில் வேலை வாய்ப்பு பற்றி அருமையாக எடுத்துரைக்கிறது.
மலேசியாவில் சீனப் பெண்கள் என்ற தலைப்பிலான தகவல் ஏங்க வைக்கும் படியாய் உள்ளது. அங்குள்ள சூதாட்ட விடுதிகள் பற்றி விரிவான தகவல்கள் சுவை கூட்டுகின்றன. வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல விருப்பம் உடையோருக்கு நல்ல வழிகாட்டும் கையேடாக உள்ள நுால்.
– டாக்டர் கார்முகிலோன்