வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் கியூபா விடுதலைக்கு பாடுபட்ட சே குவேராவில் வாழ்க்கை, போராட்ட குணங்களை பட்டியலிடும் நுால்.
புத்தக வாசிப்பால் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்கிறது. போராட்ட குணத்திற்கு இடையில் இருந்த மெல்லிய காதலை பகிர்கிறது. கொரில்லா வீரராக திகழ்ந்து, படையை கையாளுவதில் கைதேர்ந்தவராக திகழ்ந்ததை சொல்கிறது.
மரண தருவாய் வரை, மக்களுக்காக போராடியதை தியாக வலிமையாக கூறுகிறது. வரலாற்றை, இன்றைய தலைமுறைகள் வாசிக்க வலியுறுத்துகிறது. சிறிய தீவு நாடான கியூபா ஆட்சி நிர்வாகம் பற்றி கூறுகிறது. சே குவேராவுக்கு முந்தைய புரட்சி தலைவர்களின் செயல்பாடுகளையும் பகிரும் நுால்.
– டி.எஸ்.ராயன்