ஆரம்பகால சினிமா பற்றிய சிந்தனைகளின் தொகுப்பு நுால். உலகில் தோன்றி வளர்ந்தபோது ஏற்பட்டிருந்த கருத்து, வழிகாட்டல் என எண்ண ஓட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவான சினிமா கலை பற்றி துவக்க காலத்தில் நிலவிய பிம்பங்களை எடுத்துக் காட்டுகிறது. அதில் கலை அம்சம் உள்ளதா என விவாதிக்க வைக்கிறது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இந்த கலை பெற்றிருந்த செல்வாக்கை வெளிப்படுத்துகிறது.
சினிமாவின் வளர்ச்சி எல்லையற்றதாக விரிந்துள்ளது. இந்த நிலையில் அது தோன்றிய காலத்தில் சிந்தனையாளர்கள் கொண்டிருந்த எண்ணங்களை அறியத் தருகிறது. காந்திஜி பற்றி சினிமா தயாரித்த அனுபவமும் சுவாரசியம் குன்றாமல் தரப்பட்டுள்ளது. சினிமாவின் அடிச்சுவட்டை காட்டும் நுால்.
– மதி