நீதியை போதிக்கும் விதத்தில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
எதிர் வீட்டில் அடைத்திருந்த கூண்டுக் கிளியை, பறக்க செய்த வழிமுறையில்ஒரு கதை உள்ளது. பள்ளியில் சைக்கிள் டயரை கிழித்த மாணவனை ஆசிரியர் திருத்திய விதம் பற்றிய கதை அவசியம் படிக்க வேண்டியது.
ஒவ்வொரு கதையிலும் கடைசி வரியில் சொல்லும் கருத்து, நேர்மையே வெல்லும் என்பதாகும். அவை இப்படியும் நடக்குமா என்ற கேள்வியை எழுப்புகின்றன. பென்ஷன் பற்றிய, ‘பெண்ணும் சன்னும்’ கைவிட்டாலும் ‘பென்ஷன்’ காப்பாற்றும் என்ற மையக் கருத்தில் அமைந்தது, பணத்துக்காக சுற்றும் பிள்ளைகளுக்கு சாட்டையடி. உரிமைத் தொகை என்ற கதை, அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் பற்றிய கருத்தை கூறுகிறது.
--– சீத்தலைச்சாத்தன்