வன்முறையின்றி, மென் போராட்டம் வழியாக, பெண்களால் சாதிக்க முடியும் என்பதை சொல்லும் நாவல். பெண்ணின் பொறுமையும், துணிச்சலும், அறிவும் ஆயுதங்கள் என விளக்குகிறது.
பண பலம், அதிகார பலம், அடியாள் பலம் உள்ள திமிர் பிடித்த அரக்கனை அடக்க முயலும் மூன்று பெண்களின் செயல்பாடு தான், நாவலின் மையக்கருத்து. கல்லுாரி தாளாளர் பண பலத்தால் போலீசாரை கைக்குள் போட்டுக் கொண்டு செயல்படும் அவலத்தை சொல்கிறது.
சமூக சேவகர், வக்கீல், மாமன் முறை உறவினர் இடையே வந்து இயன்ற உதவி செய்வதை குறிப்பிடுகிறது. கற்புக்காக வாழ்வை பலி கொடுப்பதும், வாழ்வுக்காக கற்பை பலியிடுவதும் பெண்களின் போராட்டமாக உள்ளதை குறிப்பிடுகிறது. தன்னம்பிக்கை தரும் நாவல்.
– புலவர் ரா.நாராயணன்