ஒரே கருத்தை வெளிப்படுத்தும், 23 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். சிறுபத்திரிகைகளில் வெளியானவை.
ஒரு பெண் எப்படி அச்சம் தவிர்த்தவளாக மாறினாள் என்பதை, ‘அச்சம் தவிர்’ கதை எடுத்துரைக்கிறது. தலைப்புக்கு ஏற்ப திருப்பத்தை வழங்கி, மனம் மாறும் மகனை சுட்டிக் காட்டியுள்ளது, ‘அப்பாவின் டயரி’ கதை. குடும்பம், உறவு பாதைக்குள் அத்தனை கதைகளும் நகர்கின்றன. எல்லாம் சமுதாய நலம் சார்ந்ததாக உள்ளன.
இலக்கிய வடிவத்திற்குள் அறிவுரையை இணைக்கும் வகையிலான சோதனை முயற்சி போல் அமைந்துள்ளன. மனம் எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறதோ, அதை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. பொழுது போக்குவதற்காக இன்றி, நற்பொழுதை ஆக்கும் விதமாக அமைந்துள்ளன. வித்தியாசமான சிறு கதைகளின் தொகுப்பு நுால்.
– முகிலை ராசபாண்டியன்