ஆவியை மையமாக வைத்து திகில் தரும் வகையில் படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். மல்லிகை மணம் பரவுவதாக காட்சியை குறிப்பிடும் போது பெண் பேயோ, ஆவியோ வருவதாக எளிதில் உணர்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.
உணர்வை காட்டி சிந்திக்க துாண்டும் வகையில் கதை நகர்த்தப்பட்டுள்ளது. ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறுவது போல் துவங்குகிறது. கதாபாத்திரம் ஆவியுடன் இணையும் போது மூச்சு வாங்கி இளைப்பாறுகிறது. ஆர்வத்தை துாண்டும் வகையில் உள்ளது.
ஆவியே கதையை சொல்வதால் பரபரப்பு மிக்கதாக நகர்கிறது. பின், துப்பறிவதாக மாறுகிறது. ஆவி கலந்த பாத்திரம் துப்பறிவது போல் காட்டப்பட்டுள்ளது. புரிந்து படிக்க முடிகிறது. வாசிக்கும் போது உடல் வியர்ப்பது போல் உணர வைக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்