இரண்டு திருடர்கள் ஒரு புறம்; திருமணமாகாமல், 35 வயதில் தவிக்கும் பெண்கள் மறுபுறம். இவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
பாத்திரங்களை அறிமுகப்படுத்துவது போல, கதை மாந்தர்களை பெயர், வயது வாரியாக அறிமுகம் செய்கிறது. பெண்ணை வாழ வைப்பதை விட, அவளது சொத்தை நேசிக்கும் அப்பாக்கள் அதிகம் என்ற கருத்து நெருடுகிறது. கதையோட்டம் சுவாரசியமாக உள்ளது. திருடனுக்கு தேள் கொட்டியது போல உள்ள சம்பவங்கள் கலகலப்பு ஊட்டுகின்றன.
கால்கள் இழந்தவன் மனைவி மீது காட்டும் அக்கறையும், கண் இழந்தவள் தொழிலில் காட்டும் ஆர்வமும் வியப்பூட்டும் வகையில் சித்தரிக்கப்பட்டு உள்ளன. சிந்தனைக்கு உகந்தது. படிக்க வேண்டிய நாவல்.
– சீத்தலைச் சாத்தன்