பரதநாட்டிய நுணுக்கங்களை விரிவாக தரும் நுால். புரியும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டிய முத்திரை, முகபாவனைகளை காட்டும் புகைப்படங்கள் கற்போருக்கு புரிதலை மேம்படுத்தும். உடை அலங்காரம் பற்றிய விளக்கம் தெளிவாக தரப்பட்டு உள்ளது. நடனத்தில் ஆர்வமுள்ளோர் பயன்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த புத்தகம் சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. நாட்டிய அரங்கத்தில் இயங்கும் பின்னணி இசை குறித்த கருத்தையும் தெரிவிக்கிறது. பதிவு செய்யப்பட்ட இசை நடனக் கலைஞர்களுக்கு உதவுவது பற்றியும் தெளிவுபடுத்துகிறது.
பின்னணி இசையின் சாதக, பாதக அம்சங்களை சமநிலை பார்வையுடன் முன் வைக்கிறது. நடனம் கற்போர், கற்பிப்போருக்கு பயன்படும் நுால்.
– விஜய்