நகைச்சுவை பொங்க புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
ஞாபக மறதி பேராசிரியர் பற்றி நினைவுபடுத்துகிறது, ‘ஞாபகம் வரலே ஞாபகம் வரலே’ என்ற கதை. தீபாவளி பட்டாசை, பால் பாக்கெட்டுடன் குளிர்சாதன பெட்டியில் வைத்து, ஜில்லென இருப்பதை, ‘இனி எப்படி வெடிப்பது’ என வாங்கி வந்தவர் மீது புகார் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
பல் டாக்டர் என்றால் பல்லாண்டு வாழ பாடுவாரா என்பதும் நகைச்சுவையை பொங்க வைக்கிறது. பெசன்ட்நகர் என்றால் அஷ்டலட்சுமி கோவில் நினைவுக்கு வரவேண்டும். இந்தக் கதை நாயகனுக்கு, மின் மயானம் தான் நினைவு வருகிறது. சிவப்பு கீரையை மாடு தின்றால் பால் என்ன நிறத்தில் இருக்கும் என சிந்திப்பதும் சிரிப்பு தருகிறது. ரசித்து மகிழலாம்.
– சீத்தலைச் சாத்தன்