திருக்குறளையும், திரைப்படத்தையும் இணைத்து சிறுகதைகளாக வழங்கியுள்ள நுால்.
மழை பெய்யாததால் மண்ணை நம்பி வாழும் ஏழைகள் படும் துயரத்தை, ‘ஏழை படும் பாடு’ என்ற கதையில் விவரிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏற்படும் நடுத்தர மக்களின் சிரமத்தை, ‘பட்டணமாம் பட்டணம்’ கதையில் படைத்துக் காட்டப்பட்டுள்ளது. இரண்டும் எதிரும் புதிருமாக இருந்தாலும் மழையை தொடர்புபடுத்துகின்றன.
கதைக்களமும், பாத்திரங்களும் வேறாக படைக்கப்பட்டுள்ளன. மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் சிரமம் தான் என்பதே மையக்கருத்து. எதையும் சோகத்தில் முடிக்காமல் திருப்பம் கொடுத்துள்ளது வாசிக்க மகிழ்ச்சி தருகிறது. எல்லா கதைகளுக்கும் திரைப்பட தலைப்பே சூட்டப்பட்டுள்ளது.
– முகிலை ராசபாண்டியன்