பல்வேறு பொருண்மைகளில் கருத்தை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால்.
உலகின் தோற்றம் பற்றி, ‘கண்ணுக் கெட்டா தொலைவினிலெங்கும் எரிபவை, எரியா நிலையின வென்று திண்ம, திரவ வாயுக் கோளமாய் அண்டம் நிரப்பினள் அன்னை மாயா... அன்னையின் வாண வேடிக்கைக்குள் அனைத்து தோற்றமும் முடிவும் அடங்கும். அன்பே தோற்றம்; அன்பே ஒடுக்கம்’ என வர்ணிக்கிறது.
மகாகவி பாரதி தியாகம் பற்றியும் எடுத்துரைக்கிறது. தமிழர் வீரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி விரிவாக கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால்.
– புலவர் சு.மதியழகன்