வாழ்வின் தனிப்பட்ட அனுபவங்கள், மன ஓட்டத்தின் வலியை எடுத்துக்காட்டும் நுால்.
சமூக மதிப்பு பெற எவ்வாறு ஆணாதிக்கத்தை எதிர்த்து பெண் போராட வேண்டி இருப்பதை உணர்த்துகிறது. ஆணாதிக்க பிடியிலிருந்து விடுபடவில்லை என எடுத்துக்காட்டுகிறது. இது தன் வரலாறாக ஆங்காங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பெண்ணியச் சூழலை மையப்படுத்தியுள்ள புத்தகம். தந்தைவழி சமூகத்தில் குடும்ப உறவுகள், இடையூறுகள், அனுபவிக்கப்படும் தொல்லை, வேலைக்குப் போகும் பெண் இயல்பு, பணி இடங்களில் பிரச்னை பற்றி எல்லாம் பேசுகிறது. மாதவிலக்கு பற்றிய புரிதலின் அவசியமும், அணுகுமுறையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பெண் மைய சிந்தனையாக மலர்ந்துள்ள நுால்.
– ராம.குருநாதன்