தேவி, 4/5, முதல் குறுக்குத் தெரு, ஜானகிராமன் குடியிருப்பு, வில்லிவாக்கம், சென்னை-49, (பக்கம்: 128)
நல்ல கவிதைகள் நம் மனத்தைத் தொடும்; மன மாசு போக்கும்; துன்ப நிலையை மாற்றும்; சுகம் பல தரும். அத்தகு வாய்ப்பும், வலிமையும் கவிதைகளுக்கு இருப்பதால் தான் கவிதை நூல்கள் பல தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இக்கவிதை நூலும் அவ்வகையில் ஒன்று"சுட்டும் விரல் நீ சுழற்றிவிடு சுழலும் பூமி கைப்பந்து, நெட்டை விரல் நீ நீட்டிவிடு நிமிர்ந்த வானம் கைவசந்தான்' என்று தன்னம்பிக்கையே, இதற்கு ஓர் உதாரணம். அனைவரும் படிக்க வேண்டிய கவிதை நூல்