ஆர்.முத்துக்குமார்.வெளியீடு:கிழக்கு பதிப்பகம்,நியூ ஹோரிசோன் மீடியா பி.லிட்.,எண்.33/15,எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:152. ஒபாமாவின் வெற்றி,ஒரு மனிதரின் வெற்றி அல்ல.ஓர் இனத்தின் வெற்றி.அமெரிக்காவின் முகத்தையும் முகவரியையும் மாற்றப் புறப்பட்டிருக்கும் ஒரு புயலின் சாதனைச் சரித்திரம்.மாற்றம்.இந்த ஒற்றை வார்த்தையைத் தன் அரசியல் கோட்பாடாக முன்னிறுத்தி தன் பிரசாரத்தைத் தொடங்கினார் ஒபாமா.சீறிப்பாய்ந்து வந்தன கண்டனங்கள்.வெள்ளை இனத்தை ஒரு கறுப்பரா ஆள வேண்டும்? தன் நடப்பெயரை ஹுஸேனாகக் கொண்டு இருக்கம் ஒரு கறுப்பின முஸ்லிமிடமா தேசத்தைக் கொடுக்கப்போகிறீர்கள்? ஆமாம்.அழுத்தமாக அறிவித்தது அமெரிக்கா.இனத்தையும் நிறத்தையும் சுட்டிக்காட்டி ஒபாமாவை ஒதுக்கியவர்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வைத்தனர் அமெரிக்கர்கள். ஒபாமாவின் வெற்றியை உலகெங்கிலும் உள்ள கறுப்பின மக்கள் தங்கள் சொந்த வெற்றியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களை மீட்க வந்த ரட்சகராக ஒபாமா அமெரிக்கர்களால் பார்க்கப்படுகிறார். இதுவரை அமெரிக்காவை ஆண்ட அதிபர்கள் அனைவரையும் விட ஒபாமாவுக்குச் சவால்கள் அதிகம்.சிதைந்த பொருளாதாரம்.பங்குச் சந்தை வீழ்ச்சி.திவாலாகிக் கொண்டிருக்கம் நிதி நிறுவனங்கள்.நம்பிக்கையிழந்த மக்கள்.அனைத்தையும் மாற்றியாக வேண்டும்.அனைவரையும்.அதுவும்,உடனே.பராக் ஒபாமாவின் வெற்றிக்கதையின் வாயிலாக,அமெரிக்க கறுப்பின மக்களின் சரித்திரத்தை பளிச்சென்று படம்பிடித்துக் காட்டகிறது இந்நூல்.