மனித வாழ்வின் நோக்கம், அர்த்தம், பொருள், வாழ்க்கைத் தத்துவம் ஆகியன விளக்கும் நுால்.
பிரபஞ்ச சக்திகள் பிண்டமாகிய இப்பஞ்சபூத உடலில் குடிகொண்டிருப்பதையும், உடலின் அற்புத ஆற்றலை அறியும் வழியையும் விளக்குகிறது.
உடலின், 96 தத்துவங்களை விளக்கி அபூர்வ சக்திகளை விளக்குகிறது. நல்வாழ்க்கை கடமை, மானிடப் பிறவியின் கடமை என ஐம்பெரும் வேள்விகளை கூறுகிறது.
மூச்சுக் காற்றை இழுத்து, வெளிவிட்டு, உள் நிறுத்துவதை விளக்குகிறது. பஞ்சக சமாதி குறித்தும் அறியத்தருகிறது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு, பொறுமை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. ஊதுவத்தி ஏற்றுவது, குரங்கு, பாம்பை வணங்குவதன் காரணம், பலி பீடத்தின் பொருள் பற்றி விளக்குகிறது. அருமையான ஆன்மிக நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து