சிரிப்பாகும் சிலேடையையும், அதிர்ச்சி தரும் வசையையும், இரட்டுற மொழிதலையும் பாடுவதில் சிறந்த காளமேகம் பாடல்களை தரும் நுால்.
நல்லவரை வாழ்த்தி, தீயவரை வீழ்த்திய பாடல்களுக்கு ஈடு இணையில்லை. ஸ்ரீரங்கம் கோவில் மடைப்பள்ளி பரிசாரகர் வரதன், திருவானைக்கோவில் தேவதாசி மோகனாங்கி மீது காதல் கொண்டான். தொடர்ந்து அம்பிகை அருள் பெற்று, காளமேகமாகி, கவிமழை பொழிந்தான். வசையை பாடியதால் மண் மழை பொழிந்து ஊரே அழிந்ததாக ஒரு தகவல் உள்ளது.
கடவுள் துதி, திருமலைராயன் பட்டினப் பாடல்கள், சிலேடை, வித்தாரக்கவிகள், தனிப்பாடல்கள் சுவைபட விளக்கப்பட்டுள்ளன. அதிமதுர கவி – காளமேகம் இடையே நடந்த புலமைப் போர் சுவையாக தரப்பட்டுள்ளது. இலக்கணம் கற்காதவரின் கவிதையை சுவைபட தரும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்