கால்நடை மருத்துவம் சார்ந்த நுால். மருத்துவர்களின் அனுபவ வெளிப்பாடாக அமைந்துள்ளது.
தமிழக கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை சார்ந்த தகவல்கள் நிரம்பியுள்ளன. மொத்தம், 23 மருத்துவர்களின் அனுபவங்கள் பதிவாகியுள்ளன. சிகிச்சையில் பின்பற்றப்பட்ட பழைய நடைமுறை விபரமும் சொல்லப்பட்டுள்ளது. குறைந்த வசதியுடன் சிகிச்சை அளிக்க ஏற்பட்ட சிரமங்கள் பலரின் அனுபவம் வழியாக வெளிப்பட்டுள்ளது.
வன விலங்குகளுக்கு சிகிச்சை, கோழிப் பண்ணையில் மேலாண்மை, தீவன நிர்வாகம், பறவை மற்றும் குதிரைக்கு சிகிச்சை முறைகள் சுவாரசியம் குன்றாமல் தரப்பட்டுள்ளன.
விலங்குகளுடனான பிணைப்பு உணர்வு நிலையில் படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் கால்நடை மருத்துவம் குறித்த கவனம் ஈர்க்கும் நுால்.
– மதி