புராண மரபு வித்தியாசமான பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள கதை நுால்.
பழங்காலக் கதையில் வரும் பாத்திரங்கள் போரிடுவது சாத்வீகமாகவும், வேடிக்கை வினோதமாகவும் காட்டப்பட்டுள்ளது. கதையில் தசகிரிகன் என்ற ராவணனின் பத்து தலைகளும் பல தீமைகள் செய்வதாக உருவகிக்கப்பட்டுள்ளது. அவை சுயநலம், வேற்றுமை, கோள், பொய், இச்சை, என வகைப்படுத்துகிறது. சாத்திரம், மந்திரம், எக்கியம், தெய்வம், மோட்சம் ஐந்தும் பஞ்ச தந்திரம் என்பதாக குறிப்பிடுகிறது.
காட்சிகள் வித்தியாசமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. வேறுபட்ட கதை அம்சத்தை வெளிப்படுத்துகின்றன. அனுமனிடம் கணையாழி தந்து லட்சுமணனிடம் காதலைக் கூற சூர்ப்பனகை உரைப்பது போல் அமைந்துள்ளது. வித்தியாசமாக உள்ள கதை நுால்.
– முனைவர் ம.கி.ரமணன்