ஆண்டாள் தொடுத்த பாமாலைகளை மையமாக வைத்து அன்பைத் துாண்டும் நுால்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் கூறப்பட்டுள்ள கதை, நிகழ்வுகள் சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.ஆண்டாளின் அன்பு, காதல், பக்தி, ஆளுமை, துணிச்சலை படம் பிடித்துக் காட்டுகிறது. வார்த்தை பயன்பாடுகளில் உள்ள நுட்பங்களைக் கூறுகிறது. தமிழ்ச் சுவையுடன் பக்தியை அனுபவிக்கச் செய்கிறது.
பக்திக்கு ஆண்டாளின் சுவையான பாசுரங்களின் வாயிலாக பதில்களை தருகிறது. எதையும் மனமுவந்து கொடுக்கும் பொழுதே அன்பு முழுமை பெறும் என்ற பாடத்தை, ஒரு பெண்ணின் வாழ்வை முன்வைத்து காட்டும் அற்புத நுால்.
– தி.க.நேத்ரா