குரு, சீடர் பாரம்பரியமாக வாழ்வின் நுட்பங்களை ஆராய்ந்து சொல்லும் நுால்.
வாழ்வின் எல்லையை நிர்ணயிக்க தேவையான நுட்பங்களுடன் கூடிய பயிற்சியாக பழங்கால நடைமுறைகளில் இருந்தது யோகா. இன்றைய நிலையில் யோகா ஆசிரியராக விரும்பும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
யோகா கல்வியை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. பயிற்சி முறைகள், சுய சிகிச்சை, உளவியல், வளர் சிதை மாற்றங்கள், சிறுவர்களுக்கான யோகா, பெண்களுக்கான ஆசனங்கள் என பல தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. உடல் நலம் பேண விரும்புவோரும், யோகா கற்பிக்க விரும்புவோரும் படிக்க வேண்டிய நுால்.
– புலவர் சு.மதியழகன்